search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு விபத்து"

    • பட்டாசுகள் நாலாபுரமும் வெடித்து சிதறின.
    • 10 பைக்குகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    திருப்பதி:

    ஐதராபாத் அபிட்ஸ் பகுதியில் மொத்த பட்டாசு விற்பனை கடை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்து பட்டாசுகள் வெடித்து சிதற தொடங்கின.

    இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கடையை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். தீ வேகமாக பரவியதால் கடையில் இருந்த பட்டாசுகள் நாலாபுரமும் வெடித்து சிதறின.

    வான வேடிக்கையை மிஞ்சும் அளவிற்கு அங்கிருந்த பட்டாசுகள் விண்ணில் பறந்து வெடித்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடைவிடாமல் பட்டாசுகள் வெடித்து சிதறி கொண்டே இருந்தன. இதனால் பட்டாசு கடை அருகில் இருந்த ஒரு ஓட்டல் கட்டிடத்தில் தீ பரவியது.

    அந்த கட்டிடம் முழுவதும் எரிய தொடங்கியது. அங்கிருந்த ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேறினர்.

    கடையின் முன்பு இருந்த கார்கள் பைக்குகளிலும் பட்டாசுகள் விழுந்ததில் தீப்பற்றின. இதில் கடையில் அருகில் இருந்து 10 பைக்குகள் முற்றிலும் எரிந்து நாசமானது. பெண் ஒருவர் காயமடைந்தார்.

    யாருமே அருகே செல்ல முடியாத அளவுக்கு பட்டாசுகள் வெடித்து சிதறிக் கொண்டே இருந்தன. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அருகில் உள்ள கட்டிடங்களில் தீ பரவாமல் தடுப்பதில் முழு கவனம் செலுத்தினர். பட்டாசு வெடித்துக்கொண்டே இருந்ததால் கடையை அவர்களால் நெருங்க முடியவில்லை.

    பட்டாசுகளின் முழுவதும் வெடித்து சிதறிய பிறகு பற்றி எரிந்த தீயை அனைத்தனர். இந்த சம்பவத்தால் ஐதராபாத் நகர பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தீ விபத்துக்கான காரணம் என்னும் தெரியவில்லை. பட்டாசு கடை அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


    • சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் அதிகாரிகள்.

    சென்னை:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

    இதுபோன்ற சம்பவம் இனி ஏற்படாமல் தடுக்கும் விதமாக பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்களை அமைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், தீபாவளி முடியும்வரை பட்டாசு தொழிற்சாலைகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    வருவாய், தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும். தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
    • 8 பேர் காயம் அடைந்தனர். 10 பேர் பத்திரமாக மீட்பு.

    உத்தரபிரதேச மாநிலம் கோக்ராஜ் அருகே கான்பூர் நெடுஞ்சாலையில் ஒரு பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இதில் 20 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பயங்கர வெடிச் சத்தம் கேட்டது.

    இதில் 5 பேர் தீயில் கருகி பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர். 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

    தீயணைப்பு படையினர் பல வண்டிகளில் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.

    இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வீட்டின் மேல்மாடியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் வெடி விபத்து.
    • வெடி விபத்தினால் கடையில் வேலை செய்துகொண்டிருந்த 2 சிறுவர்கள் உயிரிழப்பு

    உத்தர பிரதேசம் மாநிலம் கெல்வாடா கிராமத்தில் உள்ள வீட்டின் மேல்மாடியில் பட்டாசுக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடையில் இன்று தீடிரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஹிமான்சு என்கின்ற 12 வயது சிறுமியும், பராசு என்ற 14 வயது சிறுவனும் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் உயிரிழந்த சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டின் உரிமையாளர் ஷதாப் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம்.
    • சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு.

    சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில், ஆய்வு செய்வதற்காக சுத்தம் செய்தபோது பட்டாசு வெடித்து சிதறியது.

    திடீரென பட்டாசு வெடித்ததில் மியாமத்துல்லா என்பவர் உயிரிழந்துள்ளார். புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    பட்டாசு வெடித்ததில் காவல் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து மியாமத்துல்லா உயிரிழந்துள்ளார்.

    இந்த விவகாரத்தை தொடர்ந்து, சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசு துகள்களை தீ வைக்க முயன்ற போது விபரீதம்
    • ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மகன் நரேஷ் (வயது 13). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறார்.

    இந்நிலையில் இவர் நேற்று மதியம் வெடிக்காத பட்டாசு துகள்களை ஒன்று சேர்த்து தீ வைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு துகள்கள் பலமாக வெடித்து முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • படு காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு கோவை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    நாடு முழுவதும் தீபா வளி பண்டிகை நேற்று உற்சா கமாக கொண்டா டப்பட்டது. தீபாவளி பண்டிகையை யொட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    அதனையும் மீறி பாதுகாப்பின்றி பட்டாசு வெடித்து பலர் காயம் அடைந்துள்ளனர். கோவை பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகன் ஆதர்ஸ் வித்யாதரன் (வயது 12). 6-ம் வகுப்பு மாணவர்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி இவர் தனது வீட்டு முன்பு பட்டாசு வெடித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் ஒரு பட்டாசை பற்ற வைத்தார். அது வெடி க்கவில்லை. இதனையடுத்து ஆதர்ஸ் வித்யாதரன் அருகே சென்று பார்த்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசு வெடித்தது.

    இதில் சிறுவனின் வலது கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகியவை துண்டானது. இதில் படு காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை அவரது பெற்றோர் மீட்டு கோவை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறா ர்கள். இது குறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கலெக்டர் கார்மேகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியுடன் ஆலோசனை நடத்தினார்.
    • சேலம் மாநகரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்காக 170 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மற்றும் மாநகரத்தில் தற்காலிகமாக அனுமதி பெற்று வைக்கப்படும் பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை சேமிக்கும் கடைகளை போலீசார் மூலம் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது சேலம் மாநகரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்காக 170 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதே சமயம் தகுந்த விசாரணையின் அடிப்ப டையில் அனுமதி அளிக்கப்படும் கடைகளில் அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை குவித்திருக்கும் கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும், விபத்துகளை தடுக்கவும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • குளக்கரை அருகே வான வேடிக்கை நிகழ்த்த ஏராளமான பட்டாசுகள் வைத்து இருந்தனர்.
    • காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த ராம ரெட்டிபாளையத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5-ம் வார திருவிழாவை நேற்று (சனிக்கிழமை) விமரிசையாக நடைபெற்றது. பின்னர் இரவு சாமி ஊர்வலம் நடந்தது.

    அப்போது அங்குள்ள குளக்கரை அருகே வான வேடிக்கை நிகழ்த்த ஏராளமான பட்டாசுகள் வைத்து இருந்தனர்.

    சாமி ஊர்வலம் வந்ததும் அங்கிருந்த பட்டாசுகளை வெடிக்க தொடங்கினர். அப்போது தீப்பொறி பறந்து விழுந்ததில்பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அருகில் கூடியிருந்தவர்கள் மீது பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்களை மீட்டு மீஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சூரி, சுரேஷ், பிரபா, பொன்மணி, உள்ளிட்ட 7 பேர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறியதால் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பட்டாசு விபத்தில் உயிரிழந்த 13 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு பா.ம.க. சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
    • ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை வந்து சந்திக்கு மாறும் கூறினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையம் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

    பலியான 13 பேரில் வீடுகளுக்கும் நேரில் சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா தனது சொந்த நிதியில் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் இறந்த 13 பேரின் குடும்பங்களுக்கும் நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை வந்து சந்திக்கு மாறும் கூறினார். அப்போது பா.ம.க. மத்திய மாவட்ட செயலாளர் டேனியலும் உடன் இருந்தார். பின்னர் பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா நிருபர்களிடம் கூறுகையில், பட்டாசு விபத்தில் உயரி ழந்தவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். தமிழக அரசு வழங்கிய 3 லட்சம் ரூபாய் நிதி போதாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 லட்ச ரூபாய் வைப்பு நிதி யாக தமிழக அரசு வழங்கி அவர்களின் வாழ் வாதாரத்தை பாது காக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • பெட்ரோல் பங்க் அருகே உள்ள குடோனில் பட்டாசு பதுக்கி வைத்து இருந்தனர்.
    • பெட்ரோல் பங்க் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த அரிசி ஆலை முழுவதுமாக சேதம் அடைந்தது.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், தோசிப்புடி நெடுஞ்சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் அருகே உள்ள குடோனில் பட்டாசு பதுக்கி வைத்து இருந்தனர்.

    நேற்று அதிகாலை பதுக்கி வைத்திருந்த பட்டாசு திடீரென வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய பட்டாசுகள் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் விழுந்தது. இதனை கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உயிர்பிழைக்க அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த நிலையில் பட்டாசுகள் அங்குள்ள பெட்ரோல் பம்ப் மீது விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் பெட்ரோல் பங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    பெட்ரோல் பங்கில் இருந்து தீப்பிழம்பு வானத்தை முட்டும் அளவு கிளம்பியது. அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதோ என எண்ணி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

    தீயை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

    பெட்ரோல் பங்க் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த அரிசி ஆலை முழுவதுமாக சேதம் அடைந்தது. வெடி சத்தம் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

    தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசு பதுக்கி வைத்தவர்கள் யார்? குடோனில் பட்டாசு வைக்க அனுமதி வாங்கி உள்ளார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளர்கள் மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • மத்தாப்பு மருந்தில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மண்குண்டாம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவருவதையொட்டி, சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் இன்று காலை தொழிலாளர்கள் மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மத்தாப்பு மருந்தில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த மருந்து பொருட்கள் வெடித்து சிதறின.

    இதில் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாமாக இறந்தனர். அவர்கள் பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை. தகவல் அறிந்ததும் சிவகாசியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×